×

ஸ்டெர்லைட் ஆலை கழிவு விவகாரத்தில் தமிழக அரசு அனுமதிக்காத பணிக்கு ஒப்புதல் கிடையாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ஸ்டெர்லைட் ஆலியின் கழிவுகளை அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசு அனுமதிக்காத எந்த பணிககளையும் மேற்கொள்ள உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்கவும்,கழிவுகளை நீக்க அனுமதிக்கோரியும் வேதாந்த தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கழிவுகளை நீக்க தமிழக அரசு அனுமதிக்கவில்லை என ஆலை தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டது.

ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான ஜோசப் அரிஸ்டாட்டில்;,‘‘ஸ்டெர்லைட் ஆலையில் தேங்கியுள்ள ஜிப்சம் கழிவுகளை அகற்ற 5 ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் அவர்கள் தான் அகற்றவில்லை. மேலும் ஜிப்சம் கழிவுகளை அகற்ற தமிழ்நாடு அரசு தடையாக இல்லை. மேலும் நாங்கள் கொடுத்த கால அவகாசத்தையும் ஆலை தரப்பில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில்,‘‘ஸ்டெர்லைட் விவகாரத்தை பொருத்தமட்டில் ஏற்கனவே தமிழ்நாடு அரசின் உயர்மட்ட குழு அனுமதி வழங்கியுள்ளபடி மட்டுமே கழிவுகளை நீக்க வேண்டும். அது ஆலையின் சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழக அரசு அனுமதிக்காத எந்த பணிகளையும் மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது. அதுசார்ந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

The post ஸ்டெர்லைட் ஆலை கழிவு விவகாரத்தில் தமிழக அரசு அனுமதிக்காத பணிக்கு ஒப்புதல் கிடையாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu govt ,Supreme Court ,New Delhi ,Sterlite Alley ,Tamil Nadu government ,
× RELATED யூடியூபர் சங்கர் வழக்கு விவகாரம்;...