×

சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ்: ஜெபர் சாம்பியன்

சார்ல்ஸ்டன்: கிரெடிட் ஒன் சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜெபர் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிச்சுடன் (26 வயது, 11வது ரேங்க்) மோதிய ஜெபர் (28வயது, 5வது ரேங்க்) டைபிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டை 7-6 (8-6) என்ற கணக்கில் கைப்பற்றினார்.

2வது செட்டிலும் பெலிண்டா கடும் நெருக்கடி கொடுத்த நிலையில், ஜெபர் 7-6 (8-6), 6-4 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 59 நிமிடத்துக்கு நீடித்தது. நடப்பு சீசனில் ஜெபர் வென்ற முதல் டபுள்யுடிஏ பட்டம் இதுதான். இந்த வெற்றியின் மூலம் மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் அவர் ஒரு இடம் முன்னேறி 4வது இடத்தை பிடித்தார். பைனலில் தோற்ற பெலிண்டா தொடர்ந்து 11வது இடத்தில் நீடிக்கிறார்.

The post சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ்: ஜெபர் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Charleston Open Tennis ,Jeffer Champion ,Charleston ,Tunisia ,Anse Geber ,Credit One Charleston Open ,Charleston Open ,Geber ,Dinakaran ,
× RELATED சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் பெலிண்டா