×

சி ல் லி பா யி ன் ட்…

  • ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன் குவித்த சாதனை விராத் கோஹ்லி வசமுள்ளது. அவர் 2016ல் நடந்த தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 973 ரன் எடுத்தார். அவரது இந்த சாதனையை, நடப்பு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும் ஷுப்மன் கில் முறியடிக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் நட்சத்திரம் ரவி சாஸ்திரி கணித்துள்ளார்.
  • பெர்லினில் நடந்த உலக செஸ் ஆர்மகெடான் ஆசியா & ஓசனியா தொடரின் பைனலில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டோரோவை வீழ்த்திய இந்திய கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் (16 வயது) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.
  • அயர்லாந்து அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் மோதவுள்ள வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிம் இக்பால் தலைமையிலான அணியில், காயம் காரணமாக அவதிப்படும் தஸ்கின் அகமதுவுக்கு பதிலாக இடது கை வேகப் பந்துவீச்சாளர் மிருத்துஞ்ஜாய் சவுத்ரி சேர்க்கப்பட்டுள்ளார். மூன்று ஒருநாள் போட்டிகளும் செம்ஸ்போர்டு கவுன்டி மைதானத்தில் மே 9, 12, 14 தேதிகளில் நடக்க உள்ளன.

The post சி ல் லி பா யி ன் ட்… appeared first on Dinakaran.

Tags :
× RELATED சி ல் லி பா யி ன் ட்…