×

பத்திரப்பதிவில் வழிகாட்டுதல் மதிப்பை சீரமைக்க உயர்மட்ட குழு அமைத்து மாவட்டந்தோறும் ஆய்வு: அமைச்சர் மூர்த்தி தகவல்

சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘பத்திர பதிவு கட்டணம் 2 சதவிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், வழிகாட்டுதல் மதிப்பு 33 சதவீத உயர்த்தப்பட்டுள்ளது’’ என்றார்.
இதற்கு அமைச்சர் மூர்த்தி அளித்த பதில், ‘‘வழிகாட்டுதல் மதிப்பின் அடிப்படையில் தான் வங்கிகள் கடன் வழங்குகிறது. இதனால் நிலம் மற்றும் சொந்த வீடு வாங்க வங்கி கடன் பெறும் போது சந்தையில் வழிகாட்டுதல் மதிப்பை பிரதிபலிக்காததால் குறைவான கடன் வழங்கப்பட்டது. எனவே, வழிகாட்டுதல் மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் பதிவு கட்டணத்தை குறை கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், வழிகாட்டுதல் மதிப்பு புதிதாக உயர்த்தப்படவில்லை. கடந்த 2012 ஆண்டில் இருந்து 2017 வரை நடைமுறையில் உள்ளது தான். அதோடு, சந்தை மதிப்பை விட வழிகாட்டுதல் மதிப்பு உயர்வாகவும், சிலவற்றில் அதிகமாகவும் பொத்தம் பொதுவாக இருக்கிறது. எனவே, வழிகாட்டுதல் மதிப்பில் உள்ள குளறுபடிகளால் பாதிப்பு ஏற்படுகிறது. இதை சரிசெய்வதற்கு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு மாவட்ட தோறும் நேரில் ஆய்வு செய்து வழிகாட்டுதல் மதிப்பு சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

The post பத்திரப்பதிவில் வழிகாட்டுதல் மதிப்பை சீரமைக்க உயர்மட்ட குழு அமைத்து மாவட்டந்தோறும் ஆய்வு: அமைச்சர் மூர்த்தி தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Murthi ,Edapadi Palanisamy ,Align the ,in Journalism and ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...