×

ஐபிஎல் போட்டிகளில் ஒரு அணியின் ஸ்கோரில் அதிக ரன்னை எடுத்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார் ஷிகர் தவான்

ஐதராபாத்: ஐபிஎல் போட்டிகளில் ஒரு அணியின் ஸ்கோரில் அதிக ரன்களை எடுத்த 2வது வீரர் என்ற சாதனையை பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் படைத்துள்ளார்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 14வது ஆட்டத்தில் பஞ்சாப் அணி – ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.

பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கடந்த 2 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரராக பிரப்சிம்ரன் இந்த போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.

மேலும் அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்த போதிலும் மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய ஷிகர் தவான் 66 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷிகர் தவான் இறுதி வரை ஆட்டமிழக்காமல் பஞ்சாப் அணியின் பேட்டிங்கை தன் தோளில் சுமந்து நின்றார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 17.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. ஐதராபாத் அணி தரப்பில் ராகுல் திரிபாதி 74 ரன்கள் எடுத்தார்.

இந்த போட்டியில் ஐபிஎல்லில் ஒரு அணி அடித்த ஸ்கோரில் அதிகமான சதவிகித ரன்னை அடித்த 2வது வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார். இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அடித்த ஸ்கோரில் (143), 69.23 சதவிகித ரன்னை தவான் ஒருவரே அடித்தார்.

இந்த பட்டியலில் பிரண்டன் மெக்கல்லம் முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல்லின் முதல் போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக கேகேஆர் அடித்த 222 ரன்களில் 158 ரன்கள்(71.17%) மெக்கல்லம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

The post ஐபிஎல் போட்டிகளில் ஒரு அணியின் ஸ்கோரில் அதிக ரன்னை எடுத்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார் ஷிகர் தவான் appeared first on Dinakaran.

Tags : Shikhar Dhawan ,IPL ,Hyderabad ,Punjab ,Dinakaran ,
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்