×

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரிப்பு: தைவானை சொந்தம் கொண்டாடும் சீனாவுக்கு அமெரிக்கா முட்டுக்கட்டை

பெய்ஜிங்: சீனாவுக்கும் தைவானுக்கும் இடையேயான 70 ஆண்டுகால மோதல் தற்போது உச்சத்தையெட்டியுள்ள நிலையில் சீனாவுக்கு பதிலடியாக மீண்டும் தைவானும் தனது ராணுவத்தை உசார் படுத்தியுள்ளது. இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவுக்கு சென்றதோடு அங்கு பிரதிநிதி சபை தலைவர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்தார். இதனால் ஆத்திரமடைந்துள்ள சீனா தனது போர் விமானங்களை தைவானை சுற்றி பறக்கவிட்டு வருகிறது.

தங்களுக்கு சொந்தமான தைவான் விஷயத்தில் யாரும் தலையிடக்கூடாது என்றும் சீனா எச்சரித்து வருகிறது. இதற்கு பதிலடியாக தைவானும் போர் விமானங்கள் மற்றும் ராணுவத்தை தயார்படுத்தும் விடியோவை மீண்டும் வெளியிட்டுள்ளது. 1949-ம் ஆண்டு சீனாவில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பல தீவுகளை கொண்ட தைவான் தன்னை இறையாண்மைமிக்க தனி நாடக அறிவித்து செயல்பட்டு வருகிறது.

ஆனால், இதை ஏற்காத சீனா இப்போதும் தைவானை சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் பிரதிநிதி சபையின் முன்னாள் தலைவர் நான்சி பெலோசி கடந்த ஆண்டு தைவானுக்கு சென்றது சீனாவை மேலும் எரிச்சலூட்டியது. அதை தொடர்ந்து தைவானையும், அதற்கு துணை நிற்கும் அமெரிக்காவையும் எதிர்க்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது சீனா. இரு நாடுகளும் மாறி மாறி போர் பயிற்சி விடியோக்களை வெளியிடுவதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

The post சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரிப்பு: தைவானை சொந்தம் கொண்டாடும் சீனாவுக்கு அமெரிக்கா முட்டுக்கட்டை appeared first on Dinakaran.

Tags : China ,Taiwan ,US ,Beijing ,
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...