×

குத்தாலம் அருகே தென்நச்சினார்குடியில் புதிய அங்கன்வாடி கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை

குத்தாலம் : குத்தாலம் அருகே தென்நச்சினார்குடியில் பழுதடைந்த சமுதாயக்கூட கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய அங்கன்வாடி கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், கோமல் ஊராட்சி தென்நச்சினார்குடியில் 27 ஆண்டுகளுக்கு முன் சமுதாயக்கூட கட்டப்பட்டது.
அதனை தொடர்ந்து 2013-2014ம் ஆண்டு ரூ.81 ஆயிரத்தில் பராமரிப்பு செய்யப்பட்டன. ஆனால் தற்போது, இந்த சமுதாயக்கூட கட்டிடம் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த சமுதாய கூடத்தில் தான் தற்போது அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்திற்கு தென்நச்சினார்க்குடி, வடநச்சினார்க்குடி, ஆற்றங்கரை தெரு ஆகிய பகுதியில் இருந்து அங்கன்வாடியில் பயிலும் ஆண், பெண் என 17 குழந்தைகளும், 1 முதல் 3 வயது வரை உள்ள சத்துமாவு வாங்கும் 20 குழந்தைகளும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் 6 நபர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் இந்த கட்டிடத்திற்கு தினந்தோறும் சென்று வருகின்றனர்.

இந்த அங்கன்வாடி கட்டிடத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கும் உட்காருவதற்கும் போதுமான இடவசதிகளும் இல்லை. கழிவறை வசதிகள் மற்றும் சமைப்பதற்கும் பத்திரங்கள் போன்றவற்றை கழுவுவதற்கும் தண்ணீர் வசதிகளும் இல்லை. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து, இந்த சிதிலமடைந்த சமுதாயக்கூட கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய அங்கன்வாடி கட்டிடமும், புதிய சமுதாயக்கூட கட்டிடமும் கட்டித்தர தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குத்தாலம் அருகே தென்நச்சினார்குடியில் புதிய அங்கன்வாடி கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Tennachinarkudi ,Guthalam ,Kutthalam ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்