×

நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன்: ரிங்கு சிங் நெகிழ்ச்சி

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் குஜராத்திற்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் ரிங்கு சிங் கடைசி 5 பந்தில் 5 சிக்சர் அடித்து கேகேஆர் அணியை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது பெற்றார். அவர் கூறுகையில், ” என்னால் இதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. நம்பிக்கை வைத்து கடைசி வரை விளையாடுங்கள், பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று ரானா கூறினார். கடைசி ஓவருக்கு முன்பாக நான் சிங்கிள் எடுக்க முயற்சி செய்யவில்லை. சிக்சர் அடிக்கவே முயற்சி செய்தேன். எதைப் பற்றியும் அதிகம் யோசிக்க வேண்டாம், பந்துக்கு தகுந்தவாறு விளையாடுங்கள் என்று உமேஷ் கூறினார்.

நானும் எதைப் பற்றியும் பெரிதாக யோசிக்கவில்லை. பந்துக்கு மட்டுமே ரியாக்ட் செய்தேன். எனக்கு நம்பிக்கை இருந்தது, கடைசியாக அது நடந்தது. நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். நான் இந்த நிலைக்கு வருவதற்காக தந்தை மிக கடுமையான கஷ்டங்களை சந்தித்துள்ளார். இன்று நான் அடித்த ஒவ்வொரு சிக்சர்களையும், எனது முன்னேற்றத்திற்காக கஷ்டங்களை சந்தித்த குடும்பத்திற்கு சமர்பித்து கொள்ள விரும்புகிறேன்” என்றார். இதனிடையே ஸ்ரேயாஸ் அய்யர் வீடியோ காலில் பேசி ரிங்கு சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்தார்.

The post நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன்: ரிங்கு சிங் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ringu Singh Leschi ,Kolkata ,Ringu Singh ,IPL ,Gujarat ,Dinakaran ,
× RELATED உலக கோப்பையையும் முத்தமிடுவேன்; ரிங்குசிங் நம்பிக்கை