×

கோடை கொண்டாட்டத்துக்கு கொடைக்கானல் தயார்

*பிரையண்ட் பூங்காவில் 1 கோடி மலர்கள் பூக்க ஏற்பாடு

*நெரிசலை தவிர்க்க ஏப். 15 முதல் ஒரு வழிப்பாதை அமல்

கொடைக்கானல் : கொடைக்கானலில் மே மாதத்தில் நடைபெறும் கோடை விழா, மலர் கண்காட்சியையொட்டி சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பிரையண்ட் பூங்காவில் 1 கோடி மலர்கள் பூக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஏப். 15 முதல் ஒரு வழிப்பாதை திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளது. இந்த சீசனில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகளவில் இருக்கும். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கொடைக்கானலில் மே மாதத்தில் பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் கோடை விழா, மலர் கண்காட்சி, விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். கொடைக்கானலில் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரையண்ட், ரோஜா, செட்டியார் பூங்காக்கள் உள்ளன. இதில் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு மலர் கண்காட்சிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒரு ேகாடி பூக்கள்: இதுகுறித்து பூங்கா மேலாளர் சிவபாலன் கூறுகையில், ‘‘20 ஏக்கர் பரப்பளவில் உள்ள பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக 3 கட்டமாக சுமார் 3 லட்சம் மலர் நாற்றுகள் நடப்பட்டுள்ளன. புதிதாக குறிஞ்சி தோட்டம், மலர் பாத்திகள், தாவரங்களால் ஆன வளைவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மலர் நாற்றுகள் அனைத்தும் வரும் வாரத்தில் பூக்கத் துவங்கும். மே மாதம் முழுமையாக பூக்கும். இம்முறை சுமார் ஒரு கோடி மலர்கள் பூக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பூங்கா அலுவலகம் அருகிலுள்ள கிணற்றில் நடன நீரூற்று இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் செட்டியார் பூங்காவில் 3 ஆயிரம் ஹைட்ரேஞ்ஜியா மலர்கள், 50 ஆயிரம் மலர் நாற்றுகள் நடப்பட்டுள்ளன. தாவர உருவ அமைப்புகளும், ராக் கார்டன் அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளன’’ என்றார்.

ரோஜா பூங்கா மேலாளர் பார்த்தசாரதி கூறுகையில், ‘‘‘10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்காவில் 16 ஆயிரம் ரோஜா மலர் செடிகள் கவாத்து எடுத்து வரும் வாரம் பூக்க துவங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு 1,500 வகை ரோஜாக்கள் உள்ளன. மேலும் வில்லியம் மலர்களும் நடப்பட்டுள்ளன’’ என்றார்.

8 குடிநீர் ஏடிஎம்: ெகாடைக்கானல் நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் கூறுகையில், ‘‘கொடைக்கானலில் இந்த கோடை சீசன் காலத்திற்காக நகராட்சி சார்பில் சுமார் ரூ.16 லட்சம் செலவில் 8 குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் முக்கியமான இடங்களில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளது. ேமலும் 25 குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோல் ஏரியில் புதிதாக படகு குழாம், நடன நீரூற்று பணிகள் நடந்து வருகிறது’’ என்றார்.

கூடுதல் போலீசார்: கோடை சீசனில் கொடைக்கானலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஎஸ்பி சீனிவாசனிடம் கேட்டபோது, ‘‘ஏப். 15ம் தேதி முதல் கொடைக்கானலில் ஒரு வழிப்பாதை திட்டம் அமல்படுத்தப்படும். ஏரி சாலை ஒரு வழி பாதையாகவும், கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படாமலும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. முக்கியமான பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட உள்ளது. வாகன நெரிசல் ஏற்படாமல் தடுக்க கூடுதல் போலீசார் 60 பேர் பணியமர்த்தப்படவுள்ளனர். 16 முக்கியப் பகுதிகளில் பணியாற்றும் போலீசாருக்கு வாக்கி டாக்கி வழங்கப்படும்.

பிரையண்ட், ரோஜா பூங்கா பகுதிகள் மற்றும் சில இடங்களில் ரூ.10 லட்சம் செலவில் டூரிஸ்ட் போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளன. 62 இடங்களில் போலீசார் அமைத்துள்ள சிசிடிவிக்கள் மூலம் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகள் புகார்களை தடுக்கும் விதமாக ஓட்டல் – உணவக உரிமையாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்’’ என்றார்.

The post கோடை கொண்டாட்டத்துக்கு கொடைக்கானல் தயார் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Bryant Park ,Dinakaran ,
× RELATED கோடை கொண்டாட்டத்துக்கு பிரையண்ட்...