×

கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க கும்பக்கரையில் குஷி குளியல்-ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் குவியும் சுற்றுலாப் பயணிகள்

பெரியகுளம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழையால் கும்பக்கரை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் கொடைக்கானல் பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையால் அருவியில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

கொளுத்தும் கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க மக்கள் நீர்நிலைகளையும், மலைப் பிரதேசங்களையும் நாடி வருகின்றனர். பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு காலை 8 மணி முதலே தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர். கடந்த வாரம் முதல் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடைந்து விடுமுறை விடப்பட்டதால் கும்பக்கரை அருவியில் நேற்றைய தினம் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீரில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்து மகிழ்கின்றனர்.

The post கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க கும்பக்கரையில் குஷி குளியல்-ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் குவியும் சுற்றுலாப் பயணிகள் appeared first on Dinakaran.

Tags : kushi bath ,Kumbakkare ,Periyakulam ,Kumbakkar ,Kumbakarai ,Dinakaran ,
× RELATED சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் பயிர்கள் சேதம்..!!