×

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி: பிரசாந்த் உம்ராவிடம் தூத்துக்குடியில் விசாரணை

தூத்துக்குடி: வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பிரசாந்த் உம்ராவிடம் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் திருசெந்தூர் டி.எஸ்.பி வசந்த ராஜ் மற்றும் மத்தியபாகம் காவல் ஆய்வாளர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. கடந்த மாதம் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பிரசாந்த் உம்ரா புலம் பெயர் தொழிலாளர்கள் தமிழர்களால் தாக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளதாக வதந்தி பரப்பினார். இதை தொடர்ந்து தமிழகம் மற்றும் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வதந்தி பரப்பிய பிரசாந்த் உம்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிரசாந்த் உம்ராவை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தூத்துக்குடியில் இருந்து டெல்லி வரை போலீசார் சென்று வந்தனர். இந்நிலையில் வழக்கு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு பிரசாந்த் உம்ரா மனுதாக்கல் செய்திருந்தார். இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றம் பிரசாந்த் உம்ரா தூத்துக்குடி காவல் நிலையத்தில் 15 நாட்கள் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

பிரசாந்த் உம்ரா மதுரை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தூத்துக்குடியில் பிரசாந்த் உம்ரா ஆஜராகி மத்தியபாகம் காவல் நிலையத்தில் கையெழுத்திடவேண்டும் என்று உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியது. இதை அடுத்து மத்தியபாகம் காவல் நிலையத்தில் தூத்துக்குடியை சேர்ந்த பாஜக பிரமுகர்கள், வழக்கறிஞ்சர்களுடன் பிரசாந்த் உம்ரா இன்று காலை 10.10 மணியளவில் ஆஜரானார். திருசெந்தூர் டி.எஸ்.பி வசந்த ராஜ் தூத்துக்குடி டி.எஸ்.பி சத்யராஜ் மற்றும் இன்ஸ்பெக்ட்டர் ஐயப்பன் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

The post புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி: பிரசாந்த் உம்ராவிடம் தூத்துக்குடியில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Prashant Umra ,Tuticorin ,Thoothukudi ,Tirusentur ,DSP ,Madhyabhagam police station ,Prashanth Umra ,
× RELATED தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்தில் இளைஞர் ஒருவர் கொள்ளை முயற்சி..!!