×

பிரதமர் மோடியின் ஆலோசகராக அமித் காரேவை நியமிக்க ஒன்றிய அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல்..!

டெல்லி: பிரதமர் மோடியின் ஆலோசகராக அமித் காரேவை நியமிக்க ஒன்றிய அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் உயர் கல்வித் துறைச் செயலராக பணியாற்றி, கடந்த மாதம் ஓய்வு பெற்றவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமித் காரே. அதற்கு முன் மனிதவள மேம்பாடு மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறைகளின் செயலராகவும் இருந்துள்ளார் அமித் காரே. இந்நிலையில் பிரதமர் மோடியின் ஆலோசகராக அமித் காரே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு ஒன்றிய அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கியது மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை சார்பில், ‘டிஜிட்டல் மீடியா’ விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர் அமித் காரே. பிரதமர் அலுவலகத்தில் இந்திய அரசின் செயலாளர் அந்தஸ்தில், ஒப்பந்த அடிப்படையில் இரண்டு வருடம் அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, இதில் எது முன்னதாக வருகிறதோ, அதுவரை ஆலோசகராக இருப்பார் எனவும் கூறப்படுகிறது. …

The post பிரதமர் மோடியின் ஆலோசகராக அமித் காரேவை நியமிக்க ஒன்றிய அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல்..! appeared first on Dinakaran.

Tags : Union Cabinet ,Amit Khare ,Modi ,Delhi ,Appointments Committee of the Union Cabinet ,Union Cabinet Nomination Committee ,Dinakaran ,
× RELATED குவைத் மாங்காஃப் பகுதியில் ஏற்பட்ட தீ...