×

நேற்று முன்தினம் 11… நேற்று 82… புதுவையில் கொரோனா கிடு கிடு

புதுச்சேரி, ஏப். 10: நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியிலும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனையை தவிர்த்து மற்ற இடங்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் முகக்கவசம் இன்றி நடமாடி வருகின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 271 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரியில் 827 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவை – 55, காரைக்கால் – 23, ஏனாம் – 2, மாகே – 2 என மொத்தம் 82 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு 9.92 சதவீதமாக உள்ளது. மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர், கோரிமேடு அரசு மார்பு நோய் மருத்துவமனையில் 2 பேர், கோவிட் கேர் சென்டரில் 6 பேர் என மொத்தம் 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 11 பேருக்கு தான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post நேற்று முன்தினம் 11… நேற்று 82… புதுவையில் கொரோனா கிடு கிடு appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Puducherry ,Dinakaran ,
× RELATED புதுவை பகுதியில் கஞ்சா விற்ற...