×

ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடி வேலூரில் இருந்து ஆந்திராவுக்கு

வேலூர்: வேலூரில் இருந்து ஆந்திராவுக்கு ஆட்ேடாவில் ரேஷன் அரிசியை கடத்தியவரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். வேலூரில் இருந்து லத்தேரி வழியாக ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி நந்தகுமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையில் முதல்நிலை காவலர்கள் ராஜவேல், வெங்கடேசன் ஆகியோர் நேற்று காலை முதல் லத்தேரியிலிருந்து பரதராமிக்கு செல்லும் பனமடங்கி கூட்ரோட்டில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும் நிலையில் ஆட்டோ சென்றது. அதனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ரேஷன் அரிசி கடத்துவது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பரதராமி அடுத்த பூசாரிவலசை கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன்(31), இவர் வேலூரில் இருந்து ரேஷன் அரிசியை பெற்று ஆந்திராவுக்கு கோழிப்பண்ணைகளுக்கு தீவனமாக வழங்க கடத்திச்சென்றது தெரியவந்தது. ஆட்டோவுடன் 300 கிலோ ரேஷன் அரிசியுடன் பறிமுதல் செய்தனர். மேலும் ஐயப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடி வேலூரில் இருந்து ஆந்திராவுக்கு appeared first on Dinakaran.

Tags : Vellore ,Andhra Pradesh ,Smuggling ,Andhra ,Odeda.… ,Dinakaran ,
× RELATED ஆந்திராவில் ஆட்சியை பிடித்த நிலையில்...