×

திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

சின்னமனூர்/போடி, ஏப். 10: சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சியில் தேனி வடக்கு மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குச்சனூர் பேரூர் திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் தனியார் மண்டபத்தில் பேரூர் செயலாளர் திலீப் குமார் தலைமையில் நடந்தது. இந்த முகாமினை தேனி வடக்கு மாவட்டம் திமுக செயலா ளர் தங்க தமிழ்ச்செல்வன் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சின்னமனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், தேனி வடக்கு மாவட்ட துணை செயலாளர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் போடி அருகே சில்லம ரத்துப்பட்டி ,சிலமலை ராசிங்காபுரம் என 3 கிராமங்களில் தேனி வடக்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போடி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் மேற்கு ஒன்றிய செயலாளரும்,போடி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான லட்சுமணன் தலைமையில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடை பெற்றது. இதில் தேனி வடக்கு மாவட்ட திமுக செய லாளர் தங்க தமிழ்ச்செல்வன் மேற்படி 3 கிராமங்களுக்கும் சென்று தீவிர உறுப் பினர்கள் சேர்க்கும் முகாமினை துவக்கி வைத்தார். இந்த முகாமில் தேனி வடக்கு மாவட்ட துணை செயலாளர் செந்தில், போடி ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் ஒரு தலைவர் செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் அன்புச் செழியன் ,மேற்கு ஒன்றிய துணை செயலாளர் பொன்னம்பலம், மாவட்ட பிர திநிதி சந்திரசேகர்,ஒன்றிய துணைச் செ யலாளர் சுப்பிரமணி உள்ளிட்ட பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

The post திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Chinnamanur ,Bodi ,Kuchanur Parur ,Theni North District ,Kuchanur Municipality ,Dinakaran ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்