×

சாலை நடுவில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் தஞ்சாவூர் மீன் மார்க்கெட் மாற்று இடத்தில் செயல்படுத்த வேண்டும்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கீழவாசல் ரவுண்டானாவில் செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டுக்கு வருபவர் சாலை நடுவில் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களை நிறுத்தி உள்ளதால் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மீன் மார்க்கெட்டை அப்புறப் படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாநகராட்சியில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் கீழவாசல் ரவுண்டானா பகுதியில் குடியிருந்த மக்களை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தில் தற்காலிக மீன் மார்க்கெட் வைக்க மாநகராட்சி நிர்வாகம் இடம் கொடுத்துள்ளது.

200க்கும் மேற்பட்ட கடைகளின் மீன் கழிவுகள் சாலையில் கொட்டப்படுகிறது மீன் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மீன் மார்ககெட் இரு புறமும் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெருமாள் கோவிலும், 500 ஆண்டுகள். பழமைவாய்ந்த விநாயகர் ஆலயமும் உள்ளது மீன் மார்க்கெட் இருப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
மேலும் இரு சக்கர வாகனத்தில் வரும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை சாலையின் இரு புறமும் நிறுத்திவிட்டு செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நடக்கின்றன. எனவே மாநகராட்சி நிர்வாகம் மாற்று இடத்தில் மீன் மார்க்கெட்டை கொண்டு செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலை நடுவில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் தஞ்சாவூர் மீன் மார்க்கெட் மாற்று இடத்தில் செயல்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Fish Market ,Thanjavur Keezhavasal Roundabout ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...