×

திமுக ஆலோசனை கூட்டம்

சிவகங்கை, ஏப்.10: சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் காளையார்கோவில் வடக்கு ஒன்றிய திமுக, பேரூர் திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பூத் முகவர் நியமன ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் கென்னடி, பேரூர் செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து முன்னிலை வகித்தார்.

சிவகங்கை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மருத்துவர் யாழினி உறுப்பினர் சேர்க்கை, முகவர் நியமனம் குறித்து பேசினார். கூட்டத்தில் ஒன்றிய அவைத்தலைவர் தமிழரசன், மாவட்ட பிரதிநிதி கணேசன், அங்குச்சாமி, துணை செயலாளர் கண்ணன், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகா முருகானந்தம், தகவல் தொழில்நுட்ப அணி நரசிங்கராமன், இளைஞரணி பாண்டிக்குமார் மற்றும் ஒன்றிய, பேரூர் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post திமுக ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Kazhagam ,Sivagangai ,North Union Dizhagam ,Perur ,Dizaga ,Kallayargo ,Natarasangote ,Sivaganga ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தந்தை பெரியார் திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்