×

மஞ்சூர் பகுதியில் ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம்

மஞ்சூர், ஏப்.10: மஞ்சூர் சுற்றுப்புறங்களில் ஈஸ்டர் திருநாளை கிறிஸ்தவ மக்கள் சிறப்பாக கொண்டாடினார்கள். ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3ம் நாள் உயிர்த்தெழும் நிகழ்வை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் திருநாளாக கொண்டாடுகின்றனர். இதை முன்னிட்டு மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்கள் கடந்த 40 நாட்களாக தவக்காலம் அனுசரித்து வந்தனர்.
இதை முன்னிட்டு தினசரி திருப்பலிகள், ஆராதனைகள் மற்றும் பெரிய வியாழன், புனித வெள்ளி, சிலுவைபாதை ஆராதனை ஆகியவை கடைபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு குந்தா பாலத்தில் உள்ள புனித அசிரியர் ஆலயத்தில் பங்கு தந்தை ஜோசப் அடிகளார் தலைமையில் திருப்பலி, சிறப்பு ஆராதனை மற்றும் உலக அமைதி, நன்மைக்கான பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது. இதில் மஞ்சூர், குந்தா, எடக்காடு, பெங்கால்மட்டம், சாம்ராஜ், தாய்சோலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் மஞ்சூர் அருகே உள்ள எமரால்டு அன்னை வேளாங்கன்னி சர்ச்சில் பாதர் ஆர்தர் தலைமையில் திருப்பலி, சிறப்பு ஆராதனை, பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதில் எமரால்டு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நேற்று கிறிஸ்தவ மக்கள் தங்களது வீடுகளில் ஈஸ்டர் திருநாளை சிறப்பாக கொண்டாடினர்.

The post மஞ்சூர் பகுதியில் ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Easter ,Manjur ,Manjoor ,Dinakaran ,
× RELATED உடல் நலம் தேறினார் போப் பிரான்சிஸ் தலைமையில் ஈஸ்டர் ஞாயிறு