×

வீட்டில் பணம், தங்கக்காசு மாயம்

திருமங்கலம், ஏப்.10: திருமங்கலம் அருகே சிந்துபட்டியை அடுத்த தும்மக்குண்டு கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த பால்சாமி மனைவி மீனாட்சி(65). இவரது கணவர் இறந்த நிலையில், இரண்டு மகன்கள், ஒரு மகள் திருமணம் முடிந்து தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரூ.30,000 பணம், அரைப்பவுன் தங்கக்காசு ஆகியவற்றை மீனாட்சி பீரோவில் வைத்திருந்தார். பீரோ பூட்டப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் அதிலிருந்து பணம் தங்கக்காசு திருடுபோனது தெரிவந்தது. இதுகுறித்து மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வீட்டில் பணம், தங்கக்காசு மாயம் appeared first on Dinakaran.

Tags : Tirumangalam ,Balsamy ,Meenakshi ,Thummakundu Krishnapuram ,Sindhupatti ,Thirumangalam ,
× RELATED குளிக்கும்போது வீடியோ எடுத்து...