×

முட்டைகோஸ் விலை வீழ்ச்சி

ராயக்கோட்டை: ராயக்கோட்டையில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ராயக்கோட்டை பகுதிகளான கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, தளி, உத்தனப்பள்ளி, சூளகிரி மற்றும் ஓசூர் பகுதிகள் ஊட்டி, கொடைக்கானலுக்கான சீதோஷ்ணநிலை நிலவுவதால், அங்கு உற்பத்தியாகும் ஆங்கில காய்கறிகளான பீன்ஸ், பீட்ருட், கேரட், நூக்கல், முட்டைக்கோஸ், காளிப்பிளவர் ஆகிய காய்கறிகளுடன் பூக்களும் இப்பகுதியில் விளைச்சலாகிறது. இந்நிலையில் முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்றவற்றிற்கு விலையின்மையால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த மாதம் முட்டைக்கோசுக்கு விலை இல்லாததால் அதை ஏரிகளில் கொட்டி மீனுக்கு உணவாக்கினர். தொடர்ந்து காலிபிளவரும் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஒரு மூட்டை காலிபிளவர் ₹200க்கு குறைவாகவே விலை போவதாக கூறுகின்றனர். சராசரியான அளவில் பெரியதாக இருப்பது ₹10க்கும் குறைவாக விலை போகிறது. அதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

The post முட்டைகோஸ் விலை வீழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Rayakottai ,Kelamangalam ,Dhenkanikottai ,Thali ,Uthanapalli ,Choolagiri ,Dinakaran ,
× RELATED பச்சை மிளகாய் சாகுபடி அதிகரிப்பு