×

தடையை மீறி ஆர்ப்பாட்டம் கே.எஸ்.அழகிரி உட்பட 600 பேர் மீது வழக்கு

சென்னை: மோடி வருகையை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக மாநில தலைவர் கே.எஸ். அழகிரி உட்பட 600 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்த பாஜவின் ஜனநாயக படுகொலையை கண்டிக்கும் வகையில், தமிழகத்துக்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதியளிக்கவில்லை.

எனினும் காங்கிரசார் ஒன்று கூடி பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத், துணை தலைவர் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்பட 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்ததால், நுங்கம்பாக்கம் போலீசார் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிட பொறுப்பாளர் வல்ல பிரசாத் உள்ளிட்ட 600 பேர் மீது மாநகர சிட்டி போலீஸ் ஆக்ட் 41 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post தடையை மீறி ஆர்ப்பாட்டம் கே.எஸ்.அழகிரி உட்பட 600 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : KS Alagiri ,Chennai ,president ,K.S. ,Congress ,Modi ,Alagiri ,
× RELATED தண்ணீர் பற்றாக்குறை அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்