
திருவொற்றியூர்: திருவொற்றியூர், கார்கில் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (43,) வெல்டிங் வேலை செய்துவருகிறார். இவரது மனைவி உமா. இவர்களது மகள் புனிதவள்ளி (20). இவர், திருவொற்றியூர் அரசு கலை கல்லுாரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டு படிக்கிறார். சிறு வயது முதலே யோகா பயின்று வரும் இவர், ஓசூரில் நடைபெற்ற குளோபல் வேர்ல்ட் ரெக்கார்டு போட்டியில் பங்கேற்று யோகாவில் சாதனை படைத்துள்ளார். பிப்ரவரி 25ம் தேதி பழனியில் நடைபெற்ற, சர்வதேச யோகா போட்டியில் முதலிடம் பிடித்து, உத்திரபிரதேசம், வாரணாசியில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில் இப்போட்டிக்கு செல்வதற்கு அதிக செலவாகும் என தெரிகிறது. கூலி தொழிலாளியான தந்தையால், இவ்வளவு பெரிய தொகையை ஏற்பாடு செய்ய முடியாத நிலையில், மாணவி போட்டியில் பங்கேற்பது கேள்விகுறியாகியுள்ளது. யோகாவில் சாதிக்க துடிக்கும் ஏழை மாணவிக்கு தமிழக அரசு அல்லது சமூக ஆர்வலர்கள் யாரேனும் உதவ முன்வந்தால், மேலும் பல சாதனைகளை படைப்பார் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
The post உத்திரபிரதேசத்தில் நடைபெறும் யோகா போட்டியில் பங்கேற்க நிதியின்றி தவிக்கும் மாணவி appeared first on Dinakaran.
