×

பந்திப்பூரையாவது விட்டு வையுங்கள்…அதானியிடம் விற்று விடாதீர்கள்…பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் டிவிட்

பெங்களூரு: பந்திப்பூரை அதானிக்கு விற்பனை செய்து விடவேண்டாம் என காங்கிரஸ் கட்சி அதிரடியாக டிவிட் செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் நேற்று சபாரி பயணம் மேற்கொண்டார். மோடியின் இந்த பயணத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் டிவிட் பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளதாவது: நாட்டின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி 70 வருடமாக என்ன செய்தது? என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜவினர் அடிக்கடி கேட்டு வருகின்றனர். பிரதமர் மோடி, இன்று சபாரி பயணம் மேற்கொண்ட பந்திப்பூர் புலிகள் சரணாலயம் கடந்த 1973ல் காங்கிரஸ் ஆட்சியின் போது தான் அமைக்கப்பட்டது. அதன் விளைவாக தற்போது புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பிரதமர் மோடி, சபாரி பயணம் மேற்கொண்டு புகைப்படம் எடுத்து கொள்கிறார். அது சரிதான். ஆனால், பாஜ அரசு புலிகள் சரணாலயத்திற்கு இதுவரை என்ன செய்தது? எவ்வளவு நிதி ஒதுக்கியது? காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி சபாரி பயணம் மேற்கொண்டிருப்பதை வரவேற்கிறோம். ஆனால், இந்த பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தையும் நண்பரான கவுதம் அதானிக்கு தயவு செய்து விற்பனை செய்து விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். கொரோனா பரவலின் போது சாம்ராஜ்நகரில் 36 பேர் இறந்தனர். ஆக்சிஜன் இன்றி இறந்த அந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு நேரம் இல்லையா? அல்லது அந்த குடும்பத்தை சந்தித்து பேசுவதற்கு விருப்பம் இல்லையா? இவ்வாறு காங்கிரஸ் கட்சியின் டிவிட் பதிவில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

The post பந்திப்பூரையாவது விட்டு வையுங்கள்…அதானியிடம் விற்று விடாதீர்கள்…பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Bandipur…Do ,Adani…Congress ,PM Modi ,Bengaluru ,Congress party ,Bandipur ,Adani ,Narendra Modi ,Congress ,Modi ,Dinakaran ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...