×

ரூ.50 ஆயிரத்துக்கு தொழில் தொடங்க முடியுமா?..பிரதமரின் முத்ரா திட்டம் பற்றி ப.சிதம்பரம் கேள்வி

புதுடெல்லி: இந்த காலத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு என்ன தொழில் தொடங்க முடியும் என்று ஒன்றிய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி கேட்டுள்ளார். பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதியுதவி நிறுவனங்கள், இதர நிதி இடைத்தரகு நிறுவனங்கள் ஆகியவை ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்குகிறது. வருவாய் பெருக்கம், உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு, சேவை துறை, வேளாண் மற்றும் அதனை சார்ந்த துறையினருக்கு இந்த கடன் வழங்கப்படுகிறது. இதில்,இதுவரை ரூ. 23.2 லட்சம் கோடிக்கு வங்கிகள்,நிதிநிறுவனங்கள் கடன் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இதுபற்றி முன்னாள் ஒன்றிய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: பிரதமரின் முத்ரா திட்டம் கடந்த 2015ம் ஆண்டு துவக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் வாயிலாக பெருநிறுவனங்கள் அல்லாத தொழில் துறையினர், விவசாயம் அல்லாத சிறு/குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்படி 8 ஆண்டுகளில் ரூ.23.2 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இது மிக பெரிய தொகை என்று கூறப்பட்டாலும் கூட இதில், வழங்கப்பட்ட 83 சதவீத கடன் தொகை ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவானது. இதில் ரூ.19,25,600 கோடி ஒவ்வொருவருக்கும் ரூ.50 ஆயிரம் வீதம் அல்லது அதற்கும் குறைவாக கடன் கொடுக்கப்பட்டுள்ளது. விலைவாசி அதிகமாக இருக்கும் தற்போதைய நிலைமையில் ரூ.50 ஆயிரத்துக்கு என்ன தொழில் தொடங்க முடியும் என்று யோசித்து பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

The post ரூ.50 ஆயிரத்துக்கு தொழில் தொடங்க முடியுமா?..பிரதமரின் முத்ரா திட்டம் பற்றி ப.சிதம்பரம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : PM ,Mudra Yojana Chidambaram ,New Delhi ,Union government ,Chidambaram ,Dinakaran ,
× RELATED நாட்டில் இருந்து வறுமையை முற்றிலும்...