×

நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் இலங்கை தமிழர் குடியுரிமை தொடர்பாக முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி

வேலூர்: இலங்கை தமிழர் குடியுரிமை குறித்து நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி கூறினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேலூர் மாவட்டம் வந்தார். வேலூர் அடுத்த மேல்மொணவூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் 220 குடும்பங்களுக்காக கட்டப்பட்டு வரும் 55 தொகுப்பு வீடுகளை நேற்று ஆய்வு செய்தார்.

வீடுகளின் உள்ளே சென்று பார்த்த அவர், பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘இக்குடியிருப்புகளுக்கான கழிவுநீர் கால்வாய், குடிநீர் வசதி என அனைத்து கட்டமைப்பு வசதிகளும் குடியிருப்புகள் கட்டி முடித்து ஒப்படைக்கும்போதே முடிக்கப்பட்டுவிடும். நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன், இலங்கை தமிழர்களுக்கான குடியுரிமை தொடர்பாக முடிவு எடுக்கப்படும்’ என்றார்.

The post நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் இலங்கை தமிழர் குடியுரிமை தொடர்பாக முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி appeared first on Dinakaran.

Tags : Minister ,I. Periyasamy ,Dindigul I.Periyasamy ,Tamils ,I.Periyasamy ,
× RELATED கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு...