×

இங்கிலாந்த நகர மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் இடையே போட்டி

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் லீசெஸ்டர் மேயர் பதவிக்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பேர் போட்டியிடுகின்றனர். இங்கிலாந்தில் அடுத்த மாதம் 4ம் தேதி உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் லீசெஸ்டர் மேயர் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர் சஞ்சய் மோத்வாடியா போட்டியிடுகிறார். இதேபோல், தொழிலாளர் கட்சியில் இருந்து விலகிய ரீடா படேல் என்ற இந்திய வம்சாவளி பெண் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அண்மையில் ரீடா படேல் மேயர் பதவிகளை ஒழிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதற்காக அவர் தொழிலாளர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாட்டில் சென்னையை சேர்ந்த பெண் மோனிகா தேவேந்திரன் இங்கிலாந்து நகரம் ஒன்றின் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post இங்கிலாந்த நகர மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் இடையே போட்டி appeared first on Dinakaran.

Tags : Indians ,London ,Leicester ,England ,
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது