×

கர்ப்பிணியாக்கிவிட்டு திருமணம் செய்யகாதலன் மறுப்பு மாணவி தற்கொலை

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டத்தை சேர்ந்த முருகவேல் மகள் பிரபாவதி (20). சீர்காழியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள வேப்பமரத்தில் பிரபாவதி துப்பட்டாவால் தூக்கிட்டு பிணமாக தொங்கினார். விசாரணையில், பிரபாவதி, அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (26) என்பவரை காதலித்துள்ளார். 3மாத கர்ப்பிணியாக இருந்த பிரபாவதி, காதலன் வீட்டிற்கு சென்று திருமணம் செய்யும்படி கேட்டுள்ளார். அதற்கு காதலன் ஆனந்தராஜ் மறுத்து, நீ செத்து விடு எனக்கூறி உள்ளார். இதனால், விரக்தியடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஆனந்தராஜ் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

The post கர்ப்பிணியாக்கிவிட்டு திருமணம் செய்யகாதலன் மறுப்பு மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Murugavel ,Prabhavathy ,Perundottam ,Sirkazhi, ,Mayiladuthurai district ,
× RELATED சீர்காழியில் கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது