×

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அச்சம்

அந்தமான்: அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பிற்பகல் 2.59 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.1-ஆக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக பிற்பகல் 1.16 மணிக்கு அந்தமானில் இருந்து 228 கி.மீ. தொலைவில் கேம்பல் பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.9 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து மீண்டும் 4.01 மணியளவில் நிகோபார் தீவுகளில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3-ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் மிதமானதாக்க இருந்ததால் பெருமளவில் பொருட்சேதங்களோ, உயிர் சேதங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் தொடர்ந்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், தொடர்ந்து நிலஅதிர்வுகள் ஏற்படுமா என ஒன்றிய அரசு தொடர்ந்து ஆய்வு நடத்திவருகிறது.

The post அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Andaman ,Nicobar Islands ,
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...