×

உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் கயிலாய வாகனத்தில் திருவீதி உலா

திருச்சி: தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சக்தி தலங்களில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயிலும் ஒன்று. இங்கு சித்திரை திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான திருவிழா கடந்த 6ம் தேதி மறுகாப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கும். மேலும் இரவு பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதிஉலா நடைபெற்று வருகிறது.

நேற்று (8ம் தேதி) பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. இரவு 7 மணிக்கு அம்மன் கயிலாய வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று 4ம் நாள் பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றம் அலங்காரம் நடக்கிறது. அதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ஞானசேகரன், தக்கார் லட்சுமணன் உள்பட கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் கயிலாய வாகனத்தில் திருவீதி உலா appeared first on Dinakaran.

Tags : Thirvithi ,Kayilaya ,Temple of Vekhaiyyamman ,Trichy ,Trichy Uraiyur Vekaliyamman Temple ,Tamil Nadu ,Sitrishra ,Uriyur Vekhaliyamman Temple ,
× RELATED தென் கயிலாய பக்தி பேரவை சார்பில்...