×

வேளாண் அடுக்கு திட்டம் விவசாயிகள் விவரம் கிரெயின்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் பயன்பெற வேளாண் அதிகாரி அழைப்பு

வலங்கைமான்: வலங்கைமான் மற்றும் குடவாசல் வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் விவசாய பெருமக்களுக்கு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.மத்திய , மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக வேளாண் அடுக்கு என்ற திட்டத்தினை செயல்படுத்த உள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை,வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை ,பட்டு வளர்ச்சி துறை,உணவு வழங்கல் துறை ,வேளாண் பொறியியல் துறை,ஊரக வளர்ச்சி துறை,கால்நடை பராமரிப்பு துறை ,வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை,

விதை சான்றளிப்பு துறை உள்ளிட்ட 13 துறைகளில் அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து திட்டப்பலன்களும் கிடைக்கச்செய்யும் வகையில் GRAINS(Grower Online Registration of Agricultural Input System) என்ற வலைதளத்தில் விவசாயிகளுடைய நில உடமை விபரம் உள்ளிட்ட விபரங்களை சரிபார்க்கப்பட்டு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதில் அந்தந்த கிராமங்களின்கிராம நிர்வாக அலுவலர்கள் உதவி வேளாண்மை அலுவலர்கள் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இனி வரும் காலங்களில் அனைத்து விவசாய நல திட்டங்களும் GRAINS மூலம் விவசாய பெருமக்களை சென்றடையயிருப்பதால் அனைவரும் தங்களதுநில உடமை ஆவணம்,ஆதார் அட்டை நகல், புகைப்படம், குடும்ப அட்டை நகல்,வங்கி கணக்கு புத்தகம்ஆகியவற்றுடன் உரிய அலுவலர்களை தொடர்பு கொண்டு விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post வேளாண் அடுக்கு திட்டம் விவசாயிகள் விவரம் கிரெயின்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் பயன்பெற வேளாண் அதிகாரி அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Valangaiman ,Kudavasal ,Agriculture Jayaseelan ,Dinakaran ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு