×

வேதாரண்யம் நகராட்சி சார்பில் தூய்மைபணி விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி ஏற்பு

வேதாரண்யம்: வேதாரண்யம் நகராட்சி சார்பில் என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் நகராட்சி தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் இணைந்து நகர் பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்ள உதவுவோம் ,என் குப்பை என் பொறுப்பு என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக குப்பைகளை சாலையில் கொட்ட கூடாது, குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து தூய்மை பணியாளரிடம் வழங்க வேண்டும், என்ற முழக்கங்களை எழுப்பிக் கொண்டு பேரணியாக சென்றனர்.

குப்பைகளை வீதியில் கொட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கினர். பின்பு அங்காளம்மன் கோயிலில் வளாகத்தில் தூய்மைபணியை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில், நகரமன்ற தலைவர், புகழேந்தி துணை தலைவர் மங்களநாயகி நகராட்சி ஆணையர், ஹேமலதா பொறியாளர் முகமது இப்ராஹிம் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் வேதாரண்யம் நகராட்சி 15வது வார்டில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய குடும்பத்தினருக்கு நகர மன்ற தலைவர் புகழேந்தி நேரில் சென்று பாராட்டு தெரிவித்தனர்.

The post வேதாரண்யம் நகராட்சி சார்பில் தூய்மைபணி விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Vedaranyam Municipality ,Cleanliness Awareness Rally ,Pledge Acceptance ,Vedaranyam: N Garbage N Responsibility awareness rally ,Cleanliness Awareness Rally, Pledge Acceptance ,Dinakaran ,
× RELATED தமிழைப்பற்றி பேசி தமிழர்களை ஏமாற்றப்...