×

பாரப்பாளையம், பெரியாயிபாளையத்தில்புதிய ரேஷன் கடை திறப்பு

திருப்பூர், ஏப்.9: திருப்பூர் மாநகராட்சி 33வது வார்டுக்கு உட்பட்ட பாரப்பாளையத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நேற்று காலை நடந்தது. தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான க.செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மேயர் தினேஷ்குமார், பகுதி செயலாளர்கள் கொ.ராமதாஸ், மு.க. உசேன், மாநகராட்சி கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், பி.ஆர்.செந்தில்குமார்,வார்டு கழகச் செயலாளர். ஸ்டார் மணி (எ) பொன்னுச்சாமி. மகேந்திரன். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட பழங்கரை ஊராட்சி பெரியாயிபாளையத்தில் புதிய ரேஷன் கடையினை, திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரான செல்வராஜ் எம்எல்ஏ திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கினார்.

அவிநாசி ஒன்றிய கழக செயலாளர், அவிநாசி பேரூராட்சி மன்ற உறுப்பினர் சிவப்பிரகாஷ் தலைமையில் பெரியாயிபாளையத்தில் புதிய ரேஷன் கடை திறப்புவிழா நடைபெற்றது. பெரியாயிபாளையம் கிளை கழக அவைத்தலைவர் குப்புசாமி, கிளை கழக செயலாளர் செல்வம், அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சேதுமாதவன், கார்த்திகேயன்,அவிநாசி ஒன்றிய இளைஞர் அணி துணைஅமைப்பாளர் கேசவமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன்நம்பி, திருப்பூர் வடக்கு மாவட்ட வர்த்தகரணி அமைப்பாளர் எம்.எஸ்.மணி மற்றும் பழங்கரை ஊராட்சியை சார்ந்த கிளை கழக நிர்வாகிகள்,கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

The post பாரப்பாளையம், பெரியாயிபாளையத்தில்
புதிய ரேஷன் கடை திறப்பு
appeared first on Dinakaran.

Tags : Barapalayam, Periyaipalayam ,Tirupur ,Parappalayam ,Tirupur Corporation ,Periyipalayam, Barappalayam ,Dinakaran ,
× RELATED ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நியாயமான கூலி உயர்வை பெற்றுத்தர வேண்டும்