×

மஞ்சள் நீரால் மாநகரமே குளிர்ந்ததுவிளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள்அந்தியூர் எம்எல்ஏவிடம் வாழ்த்து

அந்தியூர், ஏப்.9: ஈரோடு மாவட்டம் அந்தியூரிலுள்ள தவிட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரமேஸ் கோ-ஆப்டெக்ஸ் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்பு முதல் பட்டியல் நேற்று வெளியானது. இதில், ஈரோடு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளராக ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், மாவட்ட துணை அமைப்பாளர்களாக அண்ணா மடுவுப் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி, பவானி காடப்பநல்லூரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாசலத்தை வீட்டில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். மேலும் திமுக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவத்திடமும் வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்களுடன் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் செபஸ்தியார் தொமுச மாவட்ட பொறுப்பாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post மஞ்சள் நீரால் மாநகரமே குளிர்ந்தது
விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள்
அந்தியூர் எம்எல்ஏவிடம் வாழ்த்து
appeared first on Dinakaran.

Tags : Andyoor MLA ,Andhiyur ,Ramesh ,Davittupalayam ,Andhiyur, Erode district ,Co-Optex ,DMK ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...