×

₹62 ஆயிரத்துக்கு கொப்பரை விற்பனை

மல்லசமுத்திரம், ஏப். 9: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் நேற்று ெகாப்பரை ஏலம் நடந்தது. திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 20 மூட்டை கொப்பரையை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் கொப்பரை முதல் தரம் கிலோ ₹72.60 முதல் ₹81.80 வரையும், கொப்பரை 2ம் தரம் கிலோ ₹61.40 முதல் ₹68.20 வரையம் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 20 கொப்பரை மூட்டைகள், ₹62 ஆயிரத்துக்கு விற்பனையானது என கூட்டுறவு சங்க அதிகாரி தெரிவித்தார்.

The post ₹62 ஆயிரத்துக்கு கொப்பரை விற்பனை appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Tiruchengode Agricultural Producers Cooperative Sales Association.… ,Coppar ,Dinakaran ,
× RELATED பழுதான தண்ணீர் தொட்டி இடிப்பு