×

கிரிக்கெட் விளையாடிய வாலிபர் திடீர் மரணம்

புழல்: புழல் பகுதியில் கிரிக்கெட் விளையாடிய வாலிபர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். புழல் பாலாஜி நகர் காந்தி பிரதான சாலையில், தனியார் விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு கிரிக்கெட், கால்பந்தாட்டம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் இருந்து, ஆரணி கங்கன் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் (36) மற்றும் அவரது நண்பர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக இங்கு வந்தனர்.

விளையாடிக்கொண்டு இருந்தபோது ஸ்ரீதர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனே அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே தர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த புழல் போலீசார், மருத்துவமனைக்கு விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் வாலிபர் இறந்ததற்கான காரணம் தெரிய வரும், என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post கிரிக்கெட் விளையாடிய வாலிபர் திடீர் மரணம் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...