×

5வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம்: 22.52 லட்சம் பேருக்கு தடுப்பூசி.!

சென்னை: தமிழகத்தில் 5வது கட்டமாக நடைபெற்ற மெகா  கொரோனா தடுப்பூசி முகாம் மூலம் 22.52 லட்சம் பேருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 8ம் தேதி இரவு வரை மொத்தம் 5 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 633  பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். முதல் தவணை தடுப்பூசியை 65 சதவீதம்  பேர், இரண்டாவது தவணையை 22 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். சென்னை  மாநகராட்சியில் 68.56 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில்,  83 சதவீதம் பேர் முதல் தவணை, 40 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி  செலுத்தி உள்ளனர். தடுப்பூசி செலுத்திக் கொண்டதில், சென்னை மாநகராட்சி  தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில்  4.80 லட்சம் கர்ப்பிணி களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பாலூட்டும்  தாய்மார்களில் 3.87 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் வசிக்கும் ஆதரவற்ற மற்றும் வீடற்ற 2,245 பேருக்கும், மனநலம்  பாதிக்கப்பட்ட 1,761 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சிறப்பு  நடவடிக்கையாக, மெரினா கடற்கரையில் இரவு தங்கும் நரிக்குறவர் சமூக  மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் இதுவரை இல்லாத  வகையில் 5வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று தமிழகம் முழுவதும்  ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள்,  சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும்  முக்கிய இடங்கள் என மொத்தம் 30 ஆயிரம் இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை  நடைபெற்றது. இந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் நேற்று 7 மணி நிலவரப்படி 22.52 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னையில் 1,600 இடங்களில் 1.63,863 பேருக்கு தடுப்பூசி  செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள்,  அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள்  ஈடுபட்டனர். மேலும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 20  லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டாம் தவணைக்கான கால அவகாசம் முடிந்தும்,  இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருந்தனர். எனவே முதல் தவணையில்  கொடுத்த விபரங்கள் அடிப்படையில், அவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு,  அவர்களின் அச்சம், தயக்கத்தை போக்கி, அவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி  செலுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதன்படி நேற்று ஏராளமானோார் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தடுப்பூசி சிறப்பு முகாமில் முதல்வர் திடீர் ஆய்வுசென்னை கிண்டி, மடுவன்கரை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சின்னமலை, புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தடுப்பூசி போட வந்த மக்களிடமும், பணியாளர்களிடமும் உரையாடினார். அவரவர் இருப்பிடத்தின் அருகிலேயே முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று  கேட்டுக்கொண்டார்.  மேலும், கொரோனா தடுப்பூசி இலக்கை அடைய மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். முதல்வரின் ஆய்வின்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்….

The post 5வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம்: 22.52 லட்சம் பேருக்கு தடுப்பூசி.! appeared first on Dinakaran.

Tags : 5th Phase Mega Vaccination Camp ,Chennai ,phase ,mega corona vaccination camp ,Tamil Nadu ,mega vaccination camp ,
× RELATED தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 36...