×

8 போர் கப்பல், 42 விமானங்களுடன் தைவானை முற்றுகையிட்டு சீனா போர் ஒத்திகை

பெய்ஜிங்: தைவான் அருகே சீன போர்கப்பல்கள், போர் விமானங்கள் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. தைவானை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக சீன அரசு கூறிவருகின்றது. தைவானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றது. இந்நிலையில் தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்க சபாநாயகரை வியாழன்று கலிபோர்னியாவில் சந்தித்து பேசினார். இதனால் அதிருப்தியடைந்த சீனா தைவானை மிரட்டும் வகையில் 3 நாள் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது.

8 போர் கப்பல்கள், 42 விமானங்கள் தைவான் எல்லையை முற்றுகையிட்டு போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இது குறித்து சீன ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தைவானின் சுதந்திரத்துக்கான பிரிவினைவாத சக்திகள் மற்றும் வெளிசக்திகளுக்கு எதிரான தீவிர எச்சரிக்கை இது. ஒத்திகையானது தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கையாகும்” என்று குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் சீனாவின் இந்த செயலுக்கு தைவான் பாதுகாப்பு துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post 8 போர் கப்பல், 42 விமானங்களுடன் தைவானை முற்றுகையிட்டு சீனா போர் ஒத்திகை appeared first on Dinakaran.

Tags : China ,Taiwan ,Beijing ,Dinakaran ,
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...