×

ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் வளைகுடாவுக்கு நீர்மூழ்கி கப்பலை அனுப்பிய அமெரிக்கா

துபாய்: ஈரானுடன் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் வளைகுடா பகுதிக்கு கடற்படையின் நீர்மூழ்கி கப்பலை அமெரிக்கா அனுப்பி உள்ளது. இதுகுறித்து பக்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5வது பிரிவின் செய்தி தொடர்பாளர் திமோதி ஹாக்கின்ஸ் கூறுகையில்,‘‘ ஜார்ஜியாவின் கிங்ஸ் பேயில் இருந்த டோம்ஹாக் ஏவுகணைகளை எடுத்து செலுத்தும் நீர்மூழ்கி கப்பல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கப்பல் சூயஸ் கால்வாய் வழியாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றடைந்துள்ளது. நீர்மூழ்கி கப்பலில் இருந்து நிலபகுதியில் உள்ள இலக்குகளை குறிவைத்து டோம்ஹாக் வகை ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தலாம். இதில் மொத்தம் 154 ஏவுகணைகள் வரை ஏவ முடியும். பிராந்திய பாதுகாப்பு மற்றும் அமைதி நிலைத்தன்மைக்கு உதவி அளித்திடும் வகையில் நீர்மூழ்கி கப்பல் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.

வளைகுடா பகுதியில், எண்ணெய் கப்பல்கள் மற்றும் சரக்கு கப்பல்களை குறி வைத்து தாக்குவதாக ஈரான் மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
கடந்த மாதம் சிரியாவின் ஹசாக்கா பகுதியில் அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் டிரோன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ தளத்தில் பணியாற்றி வந்த கான்ட்ராக்டர் பலியானார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் 19 பேர் கொல்லப்பட்டனர்.

The post ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் வளைகுடாவுக்கு நீர்மூழ்கி கப்பலை அனுப்பிய அமெரிக்கா appeared first on Dinakaran.

Tags : US ,Gulf ,Iran ,Dubai ,Bahrain ,America ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...