×

நீண்ட நேரம் வராததால் லாலுபிரசாத் மகன் உடைமைகளை தூக்கி வெளியே போட்ட ஓட்டல்

வாரணாசி: நீண்ட நேரம் வராததால் லாலு மகனும், பீகார் அமைச்சருமான தேஜ்பிரசாத் உடைமைகளை ஓட்டல் ஊழியர்கள் அப்புறப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் அமைச்சரும், லாலு பிரசாத் மகனுமான தேஜ்பிரதாப் யாதவ் நேற்று முன்தினம் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு வந்திருந்தார். அங்குள்ள ஓட்டல் ஒன்றில் அறையில் தங்கினார். பின்னர் அங்கிருந்து கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றதாக தெரிகிறது. அமைச்சர் ஓட்டல் அறைக்கு திரும்புவதற்கு தாமதமான நிலையில், ஓட்டல் நிர்வாகம், அமைச்சர் இல்லாத நேரத்தில் அவரது பெட்டி உள்ளிட்டவற்றை அறையில் இருந்து அகற்றி வரவேற்பறையில் வைத்துள்ளது. இரவு அறைக்கு திரும்பிய அமைச்சர் தேஜ்பிரதாப் யாதவ் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். போலீசார் விசாரணையில், 6ம் தேதி ஒரு நாள் மட்டும் ஓட்டல் அறைக்கு பதிவு செய்துள்ளனர். யாருக்கு என்பது தெரியாததால் அடுத்த நாள் வேறு வாடிக்கையாளர் அறையை பதிவு செய்துள்ளார். தேஜ்பிரதாப் யாதவ் நீண்ட நேரம் வராததால் அறையில் இருந்த பெட்டியை வரவேற்பு அறையில் வைத்தது தெரியவந்துள்ளது.

The post நீண்ட நேரம் வராததால் லாலுபிரசாத் மகன் உடைமைகளை தூக்கி வெளியே போட்ட ஓட்டல் appeared first on Dinakaran.

Tags : Laluprasad ,Varanasi ,Lalu ,Bihar ,Minister ,Tejprasad ,
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி...