×

அனைத்து மக்களுக்கும் சேவை செய்ய மனிதாபிமான உணர்வுடன் சட்டம் இருக்க வேண்டும்: தலைமை நீதிபதி கருத்து

கவுகாத்தி: ‘அனைத்து மக்களின் நலனுக்காகவும் சேவை செய்ய சட்டம் மனிதாபிமான உணர்வை கொண்டிருக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தி உள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது: சட்டம் நடைமுறைப்படுத்தும் போது, அது சமூகங்களின் யதார்த்தத்தை கருத்தில் கொள்ள வேண்டும். நீதித்துறையின் அங்கீகாரமானது, மக்களின் நம்பிக்கையில் அடங்கி உள்ளது. ஒரு சாமானிய குடிமகன் தனது துன்பத்திலும், தேவைப்படும் சமயத்திலும் அவனது முதலும் கடைசியுமான அணுகலாக, ஒரே முக்கிய காரணியாக நீதித்துறை இருப்பதன் மூலம் அதன் மீதான மக்களின் நம்பிக்கை தீர்மானிக்கப்படுகிறது. எனவே சட்டமானது மனிதாபிமான உணர்வுடன் உருவாக்கப்பட வேண்டும். அனைத்து மக்களின் நலன்களுக்கும் சேவை செய்வதை உறுதி செய்ய மனிதாபிமான உணர்வை சட்டம் கொண்டிருத்தல் வேண்டும். சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மைக்கான பச்சாதாபமும், மரியாதையும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அனைத்து மக்களுக்கும் சேவை செய்ய மனிதாபிமான உணர்வுடன் சட்டம் இருக்க வேண்டும்: தலைமை நீதிபதி கருத்து appeared first on Dinakaran.

Tags : Gauvathi ,Supreme Court ,
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு