×

கூடுவாஞ்சேரியில் பரபரப்பு: டயர்கள் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்தது

கூடுவாஞ்சேரி: மணலியில் உள்ள தனியார் கம்பெனியில் இருந்து இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கான டயர் உள்ளிட்ட பல்வேறு ரப்பர் பொருட்களை ஏற்றி கொண்டு இன்று அதிகாலை ஜிஎஸ்டி சாலை வழியே திருச்சிக்கு ஒரு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. திருச்சியை சேர்ந்த முத்தமிழ்செல்வன், லாரியை ஓட்டி சென்றார். கூடுவாஞ்சேரி அருகே சீனிவாசபுரம் பகுதியில் லாரி வந்தபோது, இன்ஜின் பகுதியில் திடீரென கரும்புகை எழுந்து தீப்பிடித்தது. உடனே டிரைவர், கீழே இறங்கி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயற்சித்தார்.

அதற்குள் லாரியில் இருந்த டயர் உள்ளிட்ட ரப்பர் பொருட்களில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் ஜிஎஸ்டி சாலை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து தாம்பரம், மறைமலைநகரில் இருந்து தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் விரைந்து வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் லாரி முழுவதுமாக எரிந்தது. பொத்தேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post கூடுவாஞ்சேரியில் பரபரப்பு: டயர்கள் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்தது appeared first on Dinakaran.

Tags : Goodowancheri ,Gooduvancheri ,Dinakaran ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்