×

மதுராந்தகம் பொதுப்பணித்துறை வளாகத்தில் 40 ஆண்டுகளாக அகற்றாமல் கிடக்கும் இயந்திர பாகங்கள்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பயணியர் தங்கும் விடுதி மற்றும் அலுவலகம் சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் அடுத்த மேலவளம்பேட்டையில் அமைந்துள்ளது. மேலும் இங்கே பொதுப்பணித்துறை அலுவலகங்களும் அமைந்துள்ளன. இங்கு சாலை போடும் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட தார், ஜல்லி கலவை இயந்திரங்கள் மற்றும் சாலையை சமன்படுத்த பயன்படுத்தப்படும் ரோடு ரோலர் உள்ளிட்ட வாகனங்கள் கடந்த 40 ஆண்டுகளாக பயனற்ற நிலையில் கிடக்கிறது. தற்போது இயந்திரங்களை நிறுத்தப்பட்டுள்ள பகுதியில் புற்கள் முளைத்துள்ளதால் புதர் மண்டிக்கிடக்கிறது.

இதில் இருந்து பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் நடமாடுகிறது. ஆனால் இவற்றை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவித முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அரசுக்கு சொந்தமான பொருட்கள் பயனற்று கிடப்பதுடன் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்துகிறது. எனவே, இவற்றை முறைப்படி ஏலம்விட்டு அதில் கிடைக்கும் பணத்தை அரசு கஜானாவில் சேர்க்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து மதுராந்தகம் பொதுப்பணித்துறை அலுவலக பொறியாளர் கூறும்போது: இந்த பயனற்ற இயந்திரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் பணிகள் நிறைவு பெறும் என்றார்.

The post மதுராந்தகம் பொதுப்பணித்துறை வளாகத்தில் 40 ஆண்டுகளாக அகற்றாமல் கிடக்கும் இயந்திர பாகங்கள் appeared first on Dinakaran.

Tags : Madurandam Public Department ,Madurandakam ,Chengalbatu District ,Madurandakam Public Department ,Trichy National Highway, Chennai ,Dinakaran ,
× RELATED சர்ச்சையில் சிக்கிய நிர்மலா பெரியசாமி: அதிமுக பிரசாரத்தில் சலசலப்பு