×

செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

ஐதராபாத்: செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து ரயிலில் பயணித்த பள்ளி மாணவர்களுடன் மோடி கலந்துரையாடினார்.

செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் எருமை மாடுகள் குறுக்கே வந்ததால் வந்தே பாரத் ரயில் மோதி பல இடங்களில் சேதமடைந்ததை குறிப்பிட்டு ஆளும் டிஆர்எஸ் கட்சியை சேர்ந்தவர்கள், பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில் சேவையை தொடக்கி வைக்கும்பொழுது எருமை மாடுகள் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே வர வேண்டாம் என நூதன முறையில் சுவரொட்டிகளை தயாரித்து எருமை மாடுகளுக்கு வழங்கி அதனிடம் முறையிடம் விதமாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பங்கேற்பதற்காக அவருக்காக மேடையில் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இந்நிகழ்ச்சில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளார். ஏற்கனவே தெலங்கானா மாநிலத்திற்கு பிரதமர் மோடி வருகையின்போது 4 முறை புறக்கணித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தற்போது 5வது முறையாக புறக்கணித்துள்ளார்.

மேலும் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் மாநில பாஜக தலைவர் உள்ளிட்டோர் மட்டுமே இருந்தனர். ரூ.11,360 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்கள் தொடக்கி வைக்கும் பணியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார்.

The post செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Sekandrabad- ,Tirupati ,Hyderabad ,Bharat ,Vande ,Sekandrapad- ,Modi ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…