×

ஐபிஎல் தொடரின் எல்-கிளாசிகோ என அழைக்கப்படும் சென்னை-மும்பை இடையேயான போட்டி மும்பையில் இன்று தொடக்கம்!

மும்பை: ஐபிஎல் தொடரின் எல்-கிளாசிகோ என அழைக்கப்படும் சென்னை-மும்பை இடையேயான போட்டி இன்று நடைபெற உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் இன்று இரவு 7.30க்கு மோத உள்ளது.

கால்பந்து கிளப் தொடரில் பார்சிலோனா-ரியல் மேட்ரிட் அணிகள் இடையேயான போட்டி எல்-கிளாசிகோ எனப்படும். கிளப் ரீதியிலான கால்பந்து தொடரின் இரு பலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டி எல்-கிளாசிகோ என அழைக்கப்படும்.

அதேபோல் 5 முறை சாம்பியனான மும்பை அணி மற்றும் 4 முறை சாம்பியனான சென்னை அணி மோதும் போட்டியை எல்-கிளாசிகோ என அழைக்கப்படுவர். சமபலம் கொண்ட இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரில் மோதும் முதல் போட்டி என்பதால் ரசிகர்களிடையே ஆர்வம் மேலோங்கியுள்ளது.

இன்று மாலை 3.30 மணிக்கு கவுகாத்தியில் நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் – டெல்லி அணிகள் பலப்பரீட்சை செய்கிறது. நேற்று நடைபெற்ற லக்னோ – ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் லக்னோ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

The post ஐபிஎல் தொடரின் எல்-கிளாசிகோ என அழைக்கப்படும் சென்னை-மும்பை இடையேயான போட்டி மும்பையில் இன்று தொடக்கம்! appeared first on Dinakaran.

Tags : Chennai- ,Mumbai ,L-Classic of IPL series ,Chennai ,Wankhede stadium ,L-Classic ,IPL series ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!