×

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டி: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பார்கள் என எம்.ஜி.ஆர். கூறியது என்னவாயிற்று? நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குகள் கால்பந்தாட்டத்தில் உதைபடும் பந்து போல, அலைக்கழிக்கப்படுகிறது. எங்கள் நிலையை மக்களிடம் எடுத்து சொல்வதற்கு வரும் 24ம் தேதி திருச்சியில் மாபெரும் மக்கள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். அந்த மாநாட்டில் முக்கிய தீர்மானங்களாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஜெயலலிதாவின் வெண்கல உருவ சிலை வைக்க தீர்மானம் கொண்டு வர உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க வாய்ப்பு இருந்தால் சந்திப்போம். நான் கட்சியின் நலன் கருதி அனைத்து விவகாரங்களிலும் விட்டுக்கொடுத்து சென்றேன். தலைமை இடத்தை பிடிக்க நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தன்னை பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். எம்.ஜி.ஆர். போல எடப்பாடி பழனிசாமி அணிந்த வேடத்தை பார்த்த தமிழக மக்கள் வேதனை அடைந்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆளுநர் பேசியதற்கு கருத்து கூற விரும்பவில்லை. கர்நாடக தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்துவோம். திருச்சி மாநாட்டில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா எந்த நோக்கத்திற்காக இக்கட்சியை ஆரம்பித்தார்களோ அங்கே அது நிரூபணமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டி: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Karnataka assembly elections ,O. Panneerselvam ,Chennai ,Panruti Ramachandran ,Rayapetta, Chennai ,MGR ,general secretary ,
× RELATED ஜூன் 4ம் தேதிக்கு பின் அதிமுக, இரட்டை...