×

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் காய்கறி விலை ‘கிடுகிடு’: ஒரு கிலோ இஞ்சி ரூ.120 எலுமிச்சை, பீன்ஸ் ரூ.100

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நேற்று காலை காய்கறி வரத்து குறைவாக இருந்தது. இதனால் ஒரு கிலோ இஞ்சி ரூ.120க்கும், பீன்ஸ் மற்றும் எலுமிச்சம் பழம் ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், ஒரு கிலோ வெங்காயம் ரூ.12 க்கும், தக்காளி ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து, கோயம்பேடு மார்க்கெட் சிறு மற்றும் மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும்போது,‘‘கோடை காலம் என்பதாலும், வரத்து குறைவாலும் கோயம்பேடு மார்க்கெட்டில் இஞ்சி, எலுமிச்சம் பழம் விலை உயர்ந்து காணப்பட்டது. ஆனால், வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை குறைவாக இருந்தது. வெங்காயத்தை பாதுகாத்து குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்ய மார்க்கெட்டில் குடோன் அமைத்துதர வேண்டும்” என்றார்.

The post சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் காய்கறி விலை ‘கிடுகிடு’: ஒரு கிலோ இஞ்சி ரூ.120 எலுமிச்சை, பீன்ஸ் ரூ.100 appeared first on Dinakaran.

Tags : Chennai Coimbade Market ,Chennai ,Coimbade Market ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...