×

ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் அமைச்சர்கள் குழு இன்று பேச்சு

சென்னை: அதிமுக ஆட்சியின் போது வேலை நிறுத்தப் போராட்த்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்தும், கைது செய்தும் கடந்த அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கைகளும் நீக்கப்பட்டன. இதையடுத்து, தங்களின் முக்கிய கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ தரப்பு கேட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் போவதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்து இருந்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது. அந்த குழுவினர் இன்று காலை 10 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இதற்கான அழைப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் விடுத்துள்ளதாக ஜாக்டோ-ஜியோ தெரிவித்துள்ளது.

The post ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் அமைச்சர்கள் குழு இன்று பேச்சு appeared first on Dinakaran.

Tags : Committee of Ministers ,Jacto-GEO ,Chennai ,Jakdo-Gyo ,The Committee of Ministers with ,Jacto-GEO Organization ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...