×

மிர்பூர் டெஸ்ட் போட்டி: அயர்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம்

மிர்பூர்: அயர்லாந்து அணியுடன் நடந்த டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தேசிய ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் அயர்லாந்து 214 ரன், வங்கதேசம் 369 ரன் எடுத்தன. 155 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய அயர்லாந்து, 3ம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 286 ரன் எடுத்திருந்தது. டெக்டர் 56, டக்கர் 108 ரன் விளாசி முன்னிலை பெற உதவினர். மெக்பிரைன் 71, ஹியூம் 9 ரன்னுடன் நேற்றும் 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

மெக்பிரைன் 72 ரன் (156 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), ஹியூம் 14 ரன் எடுத்து எபாதத் உசேன் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அயர்லாந்து 2வது இன்னிங்சில் 292 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (116 ஓவர்). வங்கதேச பந்துவீச்சில் தைஜுல் இஸ்லாம் 4, எபாதத் உசேன் 3, ஷாகிப் ஹசன் 2, ஷோரிபுல் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 138 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. தமிம் இக்பால் 31, நஜ்முல் ஷான்டோ 4, லிட்டன் தாஸ் 23 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். வங்கதேசம் 27.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முஷ்பிகுர் ரகிம் 51 ரன், மோமினுல் ஹக் 20 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் இன்னிங்சில் 126 ரன், 2வது இன்னிங்சில் 51* ரன் விளாசிய முஷ்பிகுர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

The post மிர்பூர் டெஸ்ட் போட்டி: அயர்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம் appeared first on Dinakaran.

Tags : Mirpur Test ,Bangladesh ,Ireland ,Mirpur ,Test ,National Stadium ,Dinakaran ,
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...