×

காங்கிரசுக்கு 60 இடங்களில் வேட்பாளர்கள் கிடைக்கவில்லை: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கிண்டல்

ஷிவமொக்கா: காங்கிரசுக்கு இன்னும் 60 இடங்களில் பொருத்தமான வேட்பாளர்கள் கிடைக்கவில்லை என்று முதல்வர் பசவராஜ் பொம்மை கிண்டலடித்துள்ளார். ஷிவமொக்காவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ‘காங்கிரசுக்கு 60 இடங்களில் பொருத்தமான வேட்பாளர்கள் கிடைக்கவில்லை. கடந்த முறை தேர்தலைவிட மிக குறைந்த இடங்களிலேயே அக்கட்சி வெற்றி பெறும். என்னுடைய கணிப்பின் படி அவர்களுக்கு பொருத்தமான வேட்பாளர்கள் கிடைக்காததால் அங்கே இங்கே தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாவது பட்டியல் தயாரிக்கும் போது டி.கே.சிவகுமார், கிட்டதட்ட அனைத்து பாஜ எம்எல்ஏக்களுக்கும் தொலைபேசியில் அழைப்புவிடுத்தார். எங்கள் கட்சிக்கு வாருங்கள். உங்களுக்கு சீட் தயாராக இருக்கிறது என்று வாக்குறுதி அளித்துள்ளார். காங்கிரஸ் தாங்கள் ஜெயிக்க போவதாக கூறிக்கொள்கிறது. ஆனால் உண்மை வேறு விதமாக உள்ளது. மிக அலட்சியமாக பாஜவை விமர்சனம் செய்துவிட்டு வெற்றி பெறுவது எளிதல்ல. பாஜ நாடாளுமன்ற குழு புதுடெல்லியில் இன்று கூடி கர்நாடக சட்டமன்றத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்கிறது. பாஜ 166 இடங்களை பிடித்து மகத்தான வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.

The post காங்கிரசுக்கு 60 இடங்களில் வேட்பாளர்கள் கிடைக்கவில்லை: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கிண்டல் appeared first on Dinakaran.

Tags : Congress ,Karnataka ,Chief Minister ,Basavaraj Toy ,Shivamogga ,Basavaraj Bombay ,
× RELATED நம்புங்கள்… நான் முதல்வராவேன்; கர்நாடக துணை முதல்வர் திடீர் பேச்சு