×

பிரதமரின் சென்னை வருகையை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு

சென்னை: பிரதமரின் சென்னை வருகையை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்.

பிரதமர் 8.4.2023 அன்று சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடம் திறப்பு விழா, எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் ‘வந்தே பாரத்’ இரயில் சேவை தொடக்க விழா, மெரினா கடற்கரை சாலை, விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழா மற்றும் பல்லாவரம், அல்ஸ்தோம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள பல்வேறு அரசு திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்கள்.

இதனை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, சென்னை விமான நிலையம், பல்லாவரம், அல்ஸ்தோம் கிரிக்கெட் மைதானம், எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் மற்றும் விவேகானந்தர் இல்லம் ஆகிய இடங்களில் நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாட்டு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது பொதுத் துறை அரசு செயலாளர் டி.ஜகநாதன், காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் சைலேந்திர பாபு, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post பிரதமரின் சென்னை வருகையை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Pariyanbu ,Chennai ,Government ,of ,Tamil Nadu ,Vaiyanbu ,
× RELATED தடையின்றி மின்சாரம்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை